ஆப்கன் குண்டு வெடிப்பு: 66 பேர் காயம்

தினமலர்  தினமலர்
ஆப்கன் குண்டு வெடிப்பு: 66 பேர் காயம்

காபூல்: ஆப்கன் சுதந்திர தினத்தை முன்னிட்டு காபூலில் நடந்த குண்டு வெடிப்பில் 66 பேர் காயமுற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண விழாவில் நடந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


இந்நிலையில் இன்று 100 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஜலாலாபாத் பகுதிகளில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


புது மாப்பிள்ளை கவலை


கடந்த சனிக்கிழமை திருமண நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். 180 பேர் காயமுற்றனர். இதில் உயிர் தப்பிய மாப்பிள்ளை மிர்வாய்ஸ் ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்; இனி என் வாழ்வில் மகிழ்ச்சி என்பதை பார்க்க முடியாது. எனது நண்பர்கள், உறவினர்களை இழந்து தவிக்கிறேன்.
அவர்களது இறுதிச்சடங்கிற்கு செல்ல கூட என்னால் முடியவில்லை. எனது மணப்பெண் இன்னும் மயக்க நிலையிலேய உள்ளார். இது போன்ற தாக்குதல் இனியும் ஆப்கனில் தொடரக்கூடாது என கூறியுள்ளார்.

மூலக்கதை