எம்.சி.ஏ கலந்தாய்வு 437 பேர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
எம்.சி.ஏ கலந்தாய்வு 437 பேர் பங்கேற்பு

கோவை: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்து வருகிறது. இதில், எம்.சி.ஏ. பிரிவில் ரெகுலர் மற்றும்  லேட்டரல் என்ட்ரி என இரண்டிற்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 801 மாணவர்கள், 727 மாணவிகள் என மொத்தம் 1,528 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த கலந்தாய்விற்கு 549 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 437 பேர் பங்கேற்றனர். இன்ஜினியரிங் பிரிவில் 303 பேர், கலை கல்லூரிகளை 124 பேர் தேர்வு செய்தனர்.

மூலக்கதை