மதுரை கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

தினகரன்  தினகரன்
மதுரை கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

மதுரை: முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.மதுரை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன், மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில் கடந்த பிப். 4ல் திமுக சார்பில்  கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசினார். எனவே, அவதூறாக பேசிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று  கூறியிருந்தார்.இந்த மனு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனு மீதான விசாரணையை செப். 27க்கு தள்ளி வைத்து நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார்.

மூலக்கதை