பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் அபாரம்

தினகரன்  தினகரன்
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் அபாரம்

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா லெவன் அணி வலுவான முன்னிலை பெற்றது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு  மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் விளையாடியது. ஆன்டிகுவா, கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த  இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்செய்தது. புஜாரா 100*, ரோகித் 68 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி  முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது (56.1 ஓவர்). கவெம் ஹாட்ஜ் 51, கார்ட்டர் 26, கேப்டன் ஹாமில்டன் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.இந்திய லெவன் பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 116 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய லெவன் அணி நிதானமாக விளையாடி ரன்  சேர்த்தது. அகர்வால் 13 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரகானே - ஹனுமா விஹாரி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது. விஹாரி 64 ரன் (125 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 19 ரன் எடுத்தனர். இந்தியா லெவன் 56 ஓவரில் 3  விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருந்தது.

மூலக்கதை