கோஹ்லிக்கு கவுரவம் | ஆகஸ்ட் 18, 2019

தினமலர்  தினமலர்
கோஹ்லிக்கு கவுரவம் | ஆகஸ்ட் 18, 2019

புதுடில்லி: டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ‘கேலரியின்’ ஒரு பகுதிக்கு விராத் கோஹ்லி பெயர் சூட்டப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு, மைதான ‘கேலரியின்’ ஒரு பகுதிக்கு அவர்களின் பெயர் சூட்டப்படும். இந்திய ஜாம்பாவன் சச்சின் (மும்பை வான்கடே), தோனி (ராஞ்சி சர்வதேச மைதானம்) இந்த பெருமையை ஏற்கனவே பெற்றுள்ளனர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி இந்த கவுரவத்தை, டில்லி கிரிக்கெட் சங்கம் வழங்கவுள்ளது. இங்குள்ள பெரோஷா கோட்லா மைதானத்தின் ‘கேலரியின்’ ஒரு பகுதிக்கு விராத் கோஹ்லி பெயர் சூட்டப்பட உள்ளது. இம்மைதானத்தின் ‘கேலரிக்கு’ பிஷன் சிங் பேடி, மொகிந்தர் அமர்நாத் பெயர் ஏற்கனவே உள்ளது. இந்திய முன்னாள் நட்சத்திரங்களான சேவக், அஞ்சும் சோப்ரா பெயரில் இம்மைதானத்தில் நுழைவுவாயில் அமைந்துள்ளது.

டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜாத் சர்மா வெளியிட்ட அறிக்கையில்,‘ விராத் கோஹ்லியின் சாதனையை எண்ணி பெருமை கொள்கிறோம். பெரோஷா மைதானத்தின் கேலரியில் ‘விராத் கோஹ்லி’ என பெயர் வைக்கவுள்ளது, இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். வரும் செப்டம்பர் 12ல் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளோம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரோஷா கோட்லா மைதானத்தில், இந்த பெருமையை விளையாடிக்கொண்டிருக்கும் வீரர் பெறுவது இதுவே முதல் முறை.

 

மூலக்கதை