நாடு முழுவதும் அனைவருக்கும் தடையற்ற மின்சார வசதியை உறுதி…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
நாடு முழுவதும் அனைவருக்கும் தடையற்ற மின்சார வசதியை உறுதி…

நாடு முழுவதும் அனைவருக்கும் தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்ய மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகக் கூறினார். மின்சாரத்தை கொண்டு செல்ல புதிய மின்வழித் தடங்களை ஏற்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம், மின்சார பற்றாக்குறையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பியூஷ் கோயல் கூறினார்.

மூலக்கதை