ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு விளைவாக…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு விளைவாக…

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு விளைவாக சிமென்ட் உற்பத்திச் செலவும் மூட்டைக்கு 10 ரூபாய் உயரக் கூடும் எனத் தெரிகிறது. இது குறித்து முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் அதிகாரி பேசுகையில் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வால் தங்களுக்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உற்பத்தி செலவு உயரும் என்று தெரிவித்தார். மத்திய பட்ஜெட் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதில் உள்ள அறிவிப்புக்களையும் கருத்தில் கொண்டு சிமென்ட் விலை உயர்வு பற்றி முடிவெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

சிமென்ட் உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கும் சிமென்ட்டுக்குமான போக்குவரத்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டிருந்தன.

மூலக்கதை