ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள் திறப்பு

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள் திறப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, இன்று முதல் 190 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால், ஸ்ரீநகரில் மட்டும் தொடக்கப் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். 144 தடை உத்தரவுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழவில்லை என்றும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்றும் கன்சால் தெரிவித்தார். விரைவில் இணையதள மற்றும் தொலைபேசி சேவைகளை முழுமையாக வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் முழுவதும் இயல்பு நிலை முழுமையாக திரும்பியதும் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கன்சால் தெரிவித்தார்.

மூலக்கதை