மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் உயரிழப்பு: 20 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் உயரிழப்பு: 20 பேர் படுகாயம்

மகாராஷ்ட்டிரா: மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள நிம்குல் கிராமம் ஷஹடா-தொண்டைச்சா அருகே சாலையில் பேருந்தின் மீது எதிர்திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த விப்த்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை