ஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்

தினமலர்  தினமலர்
ஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்

சிம்லா ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில், மழையால், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள , இமயமலையில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தில், 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெ ய்து, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


l ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு, சிர்மாவுர், சோல ன், சம்பா போன்ற இடங்களில், மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி,22 பே ர் இறந்துள்ளனர்

l நைனா தேவி என்ற இடத்தில், இதுவரை இல்லாத வகையில், 36.மீ., மழை பெ ய்துள்ளது

l நிலச்சரிவால், சிம்லா - கல்கா நகரங்களுக்கு இடையே , ரயில் போக்குவரத்து நேற்று துண்டிக்கப்பட்டது. அதுபோல , உத்தரகண்ட் மாநிலத்தில், பலத்த மழையால், எட்டு பேர் இறந்து உள்ளனர்.
இந்த மாநிலத்தின், சார்தாம் யாத்திரை எனப்படும், நான்கு புனித கோவில்களுக்கு செல்லும் வழித்தடத்தில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், யாத்திரை தடைப்பட்டுள்ளது.

l ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை, கேதார்நாத் நெடுஞ்சாலையில், நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த வழித்தடங்ளில் தடை ஏற்பட்டுள்ளது

l கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை வழித்தடங்களும், நிலச்சரிவுக்கு தப்பவில்லை. பாதுகாப்பான இடங்களுக்கு, யாத்ரீகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

மூலக்கதை