இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்து வரும் கனமழை

தினகரன்  தினகரன்
இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்து வரும் கனமழை

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மணாலி இடையிலான தேசிய நெடுஞ்சாலை 3-யில் நிலச்சரிவால் சாலையின் ஒரு பகுதி அறுத்து செல்லப்பட்ட நிலையில் அந்த வழியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கின்னார் மாவட்டம் ரிப்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை 5 மூடப்பட்டுள்ளது. அதே போல் மத்தி மாவட்டம் பழிசொக்கி பகுதியில் இடைவிடாது கனமழையால் ஆற்றங்கரையோர சாலையின் ஒருபகுதி நீரில் அடித்து செல்லப்பட்டது. குளு மாவட்டத்தில் உள்ள பீஸ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அக்காரா பஜார் பகுதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஒருபகுதி  இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பிற இடங்களுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை