ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும்: பாஜ எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பேச்சு

தினகரன்  தினகரன்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும்: பாஜ எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பேச்சு

புதுடெல்லி: ‘டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும்’ என்று டெல்லி பாஜ எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்தார். டெல்லி வடமேற்கு தொகுதி பாஜ எம்பியான பிரபல பஞ்சாபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கலகத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். இந்த பல்கலைக்கழகம் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தற்போது பல்கலைக்கழகத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கலகத்திற்கு (ஜேஎன்யு) பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும். எந்த ஒரு தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை மக்களுக்கு உறுதி செய்வோம்’’ என்றார். ெதாடர்ந்து, மற்றொரு பாஜ எம்பி மனோஜ் திவாரி பேசுைகயில், ‘‘பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த நிலையில், தற்போது ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிடுகின்றனர். இந்தியாவின் அடுத்த முயற்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்பது தான். நான் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்தியாவுடன் ஒருங்கிணைந்தது என்று தான் கூறுவார்கள்’’ என்றார். இந்நிலையில், பாஜ எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பல்கலைகழகத்தின் பெயரை மாற்ற கோரிய பேச்சு, பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் பாஜ தலைமை மற்றும் ஹன்ஸ் ராஜ் ஹன்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை