தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி

தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் ஐ.ஓ.பி., இந்திய ராணுவம், கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன. அங்குள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் கூடைப்பந்துப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவு லீக் ஆட்டங்களில் ஐ.ஓ.பி. அணி ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணியையும், இந்திய ராணுவ அணி, ஐ.சி.எஃப். அணியையும் வென்றன. மகளிர் பிரிவு ஆட்டங்களில் கேரள மின்வாரிய அணி கேரள காவல்துறை அணியையும், தென்னக ரயில்வே அணி கிழக்கு ரெயில்வே அணியையும் வென்றன. மின்னொளியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் வரும் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.

மூலக்கதை