வயதான யானைக்காக பிரசாரம்

தினமலர்  தினமலர்
வயதான யானைக்காக பிரசாரம்

கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையில், புத்தரின் பல் பாதுகாக்கப்படும் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக நடத்தப்படும் பேரணியில், நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். இலங்கையில், யானையை வளர்ப்பு விலங்காக பலரும் பராமரித்து வருகின்றனர். யானைக்கு அலங்காரம் செய்து, இந்தப் பேரணியில் பங்கேற்க வைப்பர். இந்த நிலையில், திகிரி என்ற, 70 வயதான, எலும்பும் தோலுமாக உள்ள யானையை இந்த பேரணியில் பயன்படுத்தக் கூடாது என, சமூக வலைதளங்களில் பிரசாரம் நடந்தது. அதையடுத்து, அந்த யானையைப் பயன்படுத்த மாட்டோம் என்று, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

மூலக்கதை