14 நாட்களுக்கு பின் தங்கம் விலை சரிவு

தினமலர்  தினமலர்
14 நாட்களுக்கு பின் தங்கம் விலை சரிவு

சென்னை : தமிழகத்தில், 14 நாட்களுக்கு பின், ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு, 392 ரூபாய் சரிந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், சில நாட்களாக, தங்கம் விலையில், ஏற்றம் காணப்பட்டது. கடந்த, 1ம் தேதி, தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 3,310 ரூபாய்க்கும்; சவரன், 26 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும் விற்பனையாகின. பின், சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைய துவங்கியதால், முதலீட்டாளர்கள் பலரும், பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், 2ம் தேதி முதல், தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத வகையில், 1 கிராம், 3,627 ரூபாய்க்கும்; சவரன், 29 ஆயிரத்து, 16 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில், 14 நாட்களுக்கு பின், நேற்று, 1 கிராமுக்கு, 49 ரூபாய் குறைந்து, 3,578 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 392 ரூபாய் சரிவடைந்து, 28 ஆயிரத்து, 624 ரூபாய்க்கு விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 1.10 ரூபாய் குறைந்து, 49 ரூபாய்க்கு விற்பனையானது.

மூலக்கதை