காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது

தினகரன்  தினகரன்
காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஐஏஎஸ். தேர்வில் முதன் முதலாக முதலிடம்  பிடித்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷா பைசல். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உண்மையான அணுகுமுறையை  மத்திய அரசு கடைபிடிக்கவில்லை  என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும், முஸ்லிம்களை பாரபட்சமாக  நடத்துவதாகவும் குற்றம்சாட்டி, கடந்த ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா  செய்தார். காஷ்மீரில் ஊழலற்ற, தூய்மையான, வெளிப்படையான அரசியலை   உருவாக்க, ‘ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற புதிய கட்சியை கடந்த மார்ச்சில் தொடங்கினார். இந்நிலையில், இஸ்தான்புல் செல்வதற்காக இவர் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தார். அங்கு அவரை தடுத்து  நிறுத்திய அதிகாரிகள்,  மீண்டும் நகருக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர் இறங்கியதும், பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை