ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினகரன்  தினகரன்
ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி எதிரில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலம் புனித தோமையார் மலை மாவட்டம்  சேலையூர் காவல் நிலையம் சார்பில் தலைகவசம் அணிவது மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, புனித தோமையார் மலை துணை ஆணையர் பிரபாகர், சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சின்போது தலைகவசம் அணியாமல் சென்ற 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும், அதற்கான துண்டு பிரசுரங்களும், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மூலக்கதை