‛மாநாடு-க்கு போட்டியாக சிம்புவின் ‛மகா மாநாடு

தினமலர்  தினமலர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, மாநாடு படம் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்காக வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்தார் சிம்பு. ஓர் ஆண்டாகியும் சிம்பு நடிக்க வரவில்லை. வெறுத்துப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‛மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கி உள்ளார்.

மேலும், வெங்கட் பிரபு இயக்க, ‛மாநாடு எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்” என சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். இந்நிலையில் மாநாடு படத்திற்கு போட்டியாக மகா மாநாடு என்ற பெயரில் படம் எடுக்கிறார் சிம்பு

சிம்பு சினி கிரியேசன்ஸ் சார்பில் அவரது அப்பா டி.ராஜேந்தர் தயாரிக்க, சிம்புவே நடித்து, இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை