370 சட்டப்பிரிவை நீக்க முந்தைய ஆட்சிகளுக்கு துணிவு இல்லை: பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
370 சட்டப்பிரிவை நீக்க முந்தைய ஆட்சிகளுக்கு துணிவு இல்லை: பிரதமர் மோடி உரை

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் 6-வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகிறார். 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது அனைத்து ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பலனைத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார். 370 சட்டப்பிரிவை நீக்க முந்தைய ஆட்சிகளுக்கு துணிவு இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 35 ஏ நிரந்தரமாக்காமல் தற்காலிகமாகவே வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது என்றும் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை