ஜம்மு-காஷ்மீரின் 370-வது சட்டத்தை நீக்கியதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகியுள்ளது: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரின் 370வது சட்டத்தை நீக்கியதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகியுள்ளது: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

டெல்லி: நாட்டின், 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து ஆறாவது முறையாக, டில்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். இன்று நாட்டின் 73 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லி செங்கோட்டையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலாவதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றார். தேசிய கோடியை ஏற்றியதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சாதனையை பிரதமர் மோடி சமன் செய்தார். பாஜகவை சேர்ந்த பிரதமர்களில் வாஜ்பாய் மட்டுமே செங்கோட்டையில் 6 முறை கொடியேற்றிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பின் மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது, * விடுதலைக்காக போராடியவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் 370-வது சட்டத்தை நீக்கியதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகியுள்ளது.* குழந்தைகள் நலனுக்காவும், பாலியல் குற்றங்கள் குறைவதற்காகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. * மக்கள் சேவை செய்வதற்கு அளித்த வாய்ப்புகளில் ஒரு இழையை கூட விட்டுவிடாமல் பணியாற்ற உறுதியளிப்போம். * காஷ்மீரில் சுமுக நிலையை கொண்டுவருவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன. * இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காகக் முத்தலாக் முறை நீக்கப்பட்டது. * விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. * பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே மத்திய அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம்.*  நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. * 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. இருந்தாலும் நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம்.* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயரங்களை நீக்குவதற்கு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.* மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த மருத்துவக் கல்வியில் திருத்தும் செய்யப்படும்.

மூலக்கதை