3 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
3 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிரினிடாட்ம், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் காட்ரெல்,  தாமசுக்கு பதிலாக கீமோ பால், பேபியன் ஆலன் இடம் பெற்றனர். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், எவின் லூயிஸ் களமிறங்கினர்.  பலத்த மழையால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது. கெயில் 72 ரன்களும், எவின் லீவிஸ் 43 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு துணை நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் சேர்த்தார். 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. கோலி 114 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மூலக்கதை