பெலுகான் அடித்து கொலை வழக்கு:குற்றவாளிகள் 6பேர் விடுதலை

தினமலர்  தினமலர்
பெலுகான் அடித்து கொலை வழக்கு:குற்றவாளிகள் 6பேர் விடுதலை

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் பசுக்களை கடத்திச் சென்றதாக பால் வியாபாரி பெலுகானை கும்பல் அடித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலுகான், கடந்த 2017-ம் பசுக்களை வேனில் ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி சென்றார். ஜெய்ப்பூர் -டில்லி தேசிய நெடுஞ்சாலை அருகே வேனை மறித்த பசு பாதுகாப்பு கும்பல் பெலுகானை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.

செல்போனில் எடுக்கப்பட்டஇதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. காயமடைந்த பெலுகான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் கொலை வழக்காக பதிந்து 6 பேரை கைது செய்தனர்.

நேற்று இந்த வழக்கு அல்வார் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அளித்த தீர்ப்பு, குற்றவாளிகளான 6 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் போதிய அளவில் நிரூபிக்கப்படவில்லை. வீடியோவில் இருப்பது அவர்களா என தெளிவாக தெரியவில்லை. எனவே அவர்களை விடுதலை செய்கிறேன். இவ்வாறு தீரப்பளித்தார்.


மூலக்கதை