கோஹ்லி சதம்:தொடரை வென்றது இந்தியா

தினமலர்  தினமலர்
கோஹ்லி சதம்:தொடரை வென்றது இந்தியா

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபராமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது.
வீண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று இத்தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்றது.

முதலில் டாஸ் வென்ற விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கோஹ்லி 114 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.


மூலக்கதை