மோடி கொடியேற்ற நிகழ்ச்சியில் வீராங்கனைகள்

தினமலர்  தினமலர்
மோடி கொடியேற்ற நிகழ்ச்சியில் வீராங்கனைகள்


புதுடில்லி: நாட்டின், 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து ஆறாவது முறையாக, டில்லி செங்கோட்டையில் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.
அப்போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த ப்ரீதம் சங்வா, பிளைட் லெப்டினட் ஜோதி யாதவ், பிளைட் லெப்டினட் மான்சி ஜெடா ஆகிய மூன்று வீராங்கனைகள் மோடிக்கு உதவியாக கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
தவிர 42 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3,500 மாணவிகள் 5000 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பிரதமர் 'புதிய இந்தியா'வை உருவாக்குவோம் என் முழக்கத்துடன் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்' என, எதிர்பார்க்கப்படுகிறது.


மூலக்கதை