உத்தரகண்ட் விபத்து:பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு

தினமலர்  தினமலர்
உத்தரகண்ட் விபத்து:பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு


புதுடில்லி: உத்தரகண்ட் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், மதன்னேகி என்ற இடத்தில், 'ஏஞ்சல் இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 6-ம் தேதி கங்குசாலி கிராமத்தைச் சேர்ந்த, 4 முதல் 13 வயது வரையிலான, 20 குழந்தைகள், வேனில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர்.


பிரதாப் நகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் வேன் உருண்டது. இதில், வேனில் பயணம் செய்த, ஒன்பது குழந்தைகள், பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படு காயம் அடைந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியது, விபத்தில் குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் பதிவிவேற்றியுள்ளார்.

மூலக்கதை