கொலை வழக்கில் பசு காவலர்கள் 6 பேர் விடுவிப்பு

தினகரன்  தினகரன்
கொலை வழக்கில் பசு காவலர்கள் 6 பேர் விடுவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பேஹ்ருர் பகுதியை சேர்ந்தவர் பேஹ்லு கான். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தனது மகன்கள் இருவருடன் பசுக்களை ஏற்றிக்கொண்டு வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வாகனத்தை வழிமறித்து  கும்பல் பசுவை கடத்தி சென்றதாக குற்றம்சாட்டி பேஹ்லு கானை அடித்து ெகான்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய ஜெய்ப்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சந்தேகத்தின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட விபின் யாதவ் உள்பட 6 பேரையும்  விடுவித்து உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 3 பேர் சிறுவர்கள். வழக் கில் மேல்முறையீடு செய்ய ப்போவதாக அரசு தரப்பு கூறியுள்ளது.

மூலக்கதை