டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு

மும்பை: கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் அன்னியச் செலாவணி பரிவர்த்தனை முடிவில் டாலருடனான ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்தது. கடந்த 6 மாதங்களில் மிகவும் குறைவாக 62 பைசா குறைந்து 71.40 ஆக இருந்தது.  சர்வதேச சந்தையில்ஏற்பட்ட குளறுபடி, ஆர்ஜெண்டினா நாட்டின் கரன்சி மதிப்பு சரிவு, பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பீதி அடைந்தனர். இதனால், தங்களது முதலீடுகலை பாதுகாக்கும் முயற்சியில்  ஈடுபட்டனர்.நேற்று காலை, அன்னியச் செலாவணி சந்தையில் பரிவர்த்தனை தொடங்கியதும் டாலருடனான ருபாய் மதிப்பு 71.00 ஆக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து 70.85 என்ற நிலையில் நிலைபெற்றது. நேற்று முன்தினம்  71.40 ஆக இருந்த ரூபாய் மதிப்பு நேற்று 55 பைசா அதிகரித்து 70.85 ஆனது. சீனாவின் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது புதிய வரியை ஆகஸ்டு 15ம் தேதி அமெரிக்கா அறிவிக்க தாமதமான நிலை, அன்னியச் செலாவணி முதலீட்டாளர்கள்  நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவே ரூபாய் மதிப்பு உயர காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் பங்குச்சந்தையில் இருந்து அன்னிய நிறுவனங்களின் முதலீடு வெளியேறுவது அதிகரிப்பே ரூபாய் மதிப்பு குறைய காரணம் என்று கூறப்படுகிறது. அன்னிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களிடம் உள்ள பங்குகளை அதிக  அளவில் விற்று முதலீட்டை திரும்பப் பெற்றனர். செவ்வாய்க்கிழமை 638.28 கோடி நிதியை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சில்லறை விற்பனை பணவீக்கம் அடிப்படையிலான நுகர்வோர் விலை குறியீடு ஜூலை மாதத்தில் 3.15  சதவீதமாக குறைந்தது. ஒட்டுமொத்தமாக உணவுப்பொருள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை சிறிது குறைந்து காணப்பட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை