வாலிபர் வயிற்றில் இருந்த 452 இரும்பு பொருட்கள்

தினகரன்  தினகரன்
வாலிபர் வயிற்றில் இருந்த 452 இரும்பு பொருட்கள்

அகமதாபாத்: குஜராத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபரின் வயிற்றில் இருந்து 452 உலோக பொருட்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் 28 வயது  வாலிபர். இவர், சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வயிற்று பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில்,  வயிற்றில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருப்பது தெரிந்தது.  மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த 452 உலோக பொருட்கள் எடுத்தனர். இரும்பு பூட்டு, நகவெட்டி, நாணயங்கள் உட்பட4.5 கிலோ  எடையுள்ள பொருட்கள் வயிற்றில் இருந்தன இந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 8 மாதங்களாக இதுபோன்ற சிறிய சிறிய இரும்பு பொருட்களை உணவாக கருதி விழுங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மூலக்கதை