டாடா கார் உற்பத்தி தொடர்ந்து குறைப்பு

தினகரன்  தினகரன்
டாடா கார் உற்பத்தி தொடர்ந்து குறைப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வாகனங்கள் விற்பனை மிகவும் சரிந்ததால், உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இந்த தொழிற்சாலையில் இந்த மாதத்தில் 3வது  முறையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்கள் விற்பனை குறைந்ததால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலையும் பங்குச்சந்தையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில், வாகனங்களின் உற்பத்தியை குறைக்க  தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் தேதியன்று ஒரு நாள் ஆலை மூடப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்டு 8 முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் மூடப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக  ஆகஸ்டு 16ம் தேதி முதல் 2 நாட்களுக்கு ஆலை மூடப்படுகிறது. ஆனால், உண்மையில் பார்த்தால் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களையும் சேர்த்தால் நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழப்பை  சந்தித்துள்ளனர்.

மூலக்கதை