லாஅலெக்ரியா நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்க காசு பரிசு: ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
லாஅலெக்ரியா நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்க காசு பரிசு: ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு

சென்னை: சென்னையில் மிகப் பிரபலமான லாஅலெக்ரியா இன்டர்நேஷனல் சுற்றுலா நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு மற்றும் புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுக விழா நடைபெற்றது. பெய்ரா அமைப்பின் தேசிய தலைவர் ஆ. ஹென்றி தலைமை தாங்கினார்.

டிபிஎஸ் வங்கி துணை சேர்மன் செல்வகுமார், சிங்காரம் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர். சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் நிறுவன நிர்வாக இயக்குநர் சி. காமராஜ், முன்னாள் கூடுதல் டிஜிபி வி. காமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏற்கெனவே சுற்றுலா சென்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டி, தங்கக்காசுகள், பொழுதுபோக்கு பூங்கா நுழைவு சீட்டு ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.

இவ்விழாவில் ஆ. ெஹன்றி பேசுகையில், கடந்த கோடை கால சுற்றுலாவில் நாங்கள் குடும்பத்துடன் பங்கேற்றோம். உண்மையிலேயே நாங்கள் அங்கு கண்ட காட்சிகள், சுற்றுலா தலங்கள், உள்கட்டமைப்புகள் அனைத்தும் பிரமிக்க வைத்தன.

சுற்றுலா தலங்களை லாஅலெக்ரியா நிறுவன நிர்வாக இயக்குநர் திருமுருகன் நேரில் அழைத்து சென்று விளக்கியது, எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று, அங்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்துமே லாஅலெக்ரியா நிறுவனமே பொறுப்பேற்கிறது.

நாங்கள் சுற்றி பார்த்த இடங்கள் அனைத்தும் மனதில் நீங்கா இடம்பிடித்தன. பயணங்கள் முடிவதில்லை, செம டூரு.

நீங்களும் குடும்பத்தினருடன் இந்நிறுவனம் மூலம் சென்று வாருங்கள் என ஹென்றி குறிப்பிட்டார்.

பின்னர் லாஅலெக்ரியா நிறுவன நிர்வாக இயக்குநர் திருமுருகன் கூறுகையில், இந்நிறுவனம் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களின் வசதிக்காகவும் ஒரு டூரு, 3 டீலு என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்துகிறோம். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பிட்ட நாடுகளின் சுற்றுலாவுக்கு முன்கூட்டியே முழுப் பணத்தையும் செலுத்தினால், நாங்கள் சிறப்பு சலுகைகள் தருகிறோம். அடுத்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு வாரம், மாதத் தவணை முறையில் பணம் செலுத்தலாம்.

மேலும், சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதம் முன்புகூட முழு பணம் செலுத்தும் வசதி உள்ளது.

ஒரு முறை எங்கள் நிறுவன சுற்றுலாவில் சென்று வந்தவர்கள், தங்கள் உறவினர்களை எங்களது சுற்றுலா திட்டத்தில் சேர்த்துவிட்டால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாங்க் கார்டு போனசாக வழங்கப்படுகிறது என திருமுருகன் கூறினார்.

முடிவில், லாஅலெக்ரியா நிறுவன துணை நிர்வாக இயக்குநர் நித்யாலட்சுமி திருமுருகன் நன்றி கூறினார்.

.

மூலக்கதை