மாநாடு படத்திலிருந்து நீக்கியதால் 120 கோடியில் சிம்புவின் புதிய படம்

FILMI STREET  FILMI STREET
மாநாடு படத்திலிருந்து நீக்கியதால் 120 கோடியில் சிம்புவின் புதிய படம்

சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என மாநாடு படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது.

இது அரசியல் படம் என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளிலும் நடைபெற்றது.

ஆனால் சிம்பு செய்த பிரச்சினைகளால் அவரை படத்திலிருந்து நீக்குவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.

மேலும் புதிய ஹீரோ ஒருவர் மாநாடு படத்தில் நடிப்பார் என கூறினார்.

இது குறித்து சிம்பு எதையும் தெரிவிக்கவில்லை,

இந்த நிலையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பாக ரூ. 120 கோடியில் புதிய படத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்திற்கு மகா மாநாடு எனத் தலைப்பு வைத்துள்ளதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை