ரஜினி வந்தா நல்லாயிருக்கும்..; காத்திருக்கும் சைரா படக்குழு

FILMI STREET  FILMI STREET
ரஜினி வந்தா நல்லாயிருக்கும்..; காத்திருக்கும் சைரா படக்குழு

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள படம் சைரா.

சுதந்திரப் போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சைரா-வாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.

இவருடன் நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ. 250 கோடியாகும்.

அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜட் படம் என்பதால் தெலுங்கை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தியிலும் வெளியிட உள்ளனர்.

எனவே தமிழ் பதிப்பின் அறிமுக விழாவை சென்னையிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டால் படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என படக்குழு காத்திருக்கிறதாம்.

மூலக்கதை