சல்மான்கான் தம்பியிடம் கரிசனம் காட்டும் சித்திக்

தினமலர்  தினமலர்
சல்மான்கான் தம்பியிடம் கரிசனம் காட்டும் சித்திக்

பிரபல மலையாள கமர்சியல் இயக்குனர் சித்திக், தற்போது மோகன்லாலை வைத்து பிக் பிரதர்ஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் நடித்து வருகிறார்.. இவர் நடிகர் சல்மான்கானின் சகோதரர். சமீபத்தில் கூட இவரது பிறந்தநாளை மோகன்லால் உடன் கொண்டாடினார்.

அதுமட்டுமல்ல படப்பிடிப்பின் போதும் அர்பாஸ் கானிடம் ரொம்பவே கரிசனமாக நடந்து கொள்கிறார் இயக்குனர் சித்திக்.. காரணம் பாடிகார்ட் என்கிற படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சித்திக் முதல்முறையாக பாலிவுட் சென்றபோது, அதில் கதாநாயகனாக நடித்த சல்மான்கானும், அவரது சகோதரர் அர்பாஸ் கானும் சித்திக்கை ரொம்பவே அன்புடன் கவனித்துக் கொண்டார்களாம்.

அதனால் தான் இந்த படத்தில் ஒரு நல்ல கேரக்டர் இருந்ததால் அர்பாஸ் கானை அழைத்து மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சித்திக், அதேபோல இப்போது தன்னுடைய முறை என்பதால் கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கும் அர்பாஸ் கானை சொந்த தம்பி போல கவனித்துக்கொள்கிறாராம்.

மூலக்கதை