பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா

தினமலர்  தினமலர்
பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா

மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் தோல்விப்படமாக அமைந்து விட்டது. இதனால் அவர் அடுத்து நடிப்பதாக இருந்த ஹீரோ என்கிற படம் கூட கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் டியர் காம்ரேட் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் டைரக்சனில் ராம் நடித்த ஸ்மார்ட் சங்கர் என்கிற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் விஜய்தேவரகொண்டாவிற்கு கைகொடுக்கும் விதமாக தன்னுடைய அடுத்த படத்தில் அவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இந்த படத்தை நடிகை சார்மி கவுர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.. இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாக இருக்கிறதாம்..

மகேஷ்பாபு, ராம்சரண். பிரபாஸ் என தற்போது இந்த முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பூரி ஜெகன்நாத்திடம் சரியான நேரத்தில் தான் வந்து சேர்ந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

மூலக்கதை