வெள்ள நிவாரண உதவிக்காக மலையாள நட்சத்திரங்களின் சேலஞ்ச்

தினமலர்  தினமலர்
வெள்ள நிவாரண உதவிக்காக மலையாள நட்சத்திரங்களின் சேலஞ்ச்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கேரளாவை கனமழையும் வெள்ளப்பெருக்கும் சீர்குலைத்து போட்டது. இந்த வருடமும் கேரளாவின் பல மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யும் விதமாக அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் மலையாள திரையுலக பிரபலங்கள் சேலஞ்ச் முறையில் நிதி உதவி அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு என்பவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு தன்னால் இயன்ற உதவித்தொகையை அளித்து அந்த சான்றிதழை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸுக்கு இதே போன்று ஒரு சேலஞ்ச் விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு நடிகர் டொவினோ தாமஸும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அளித்து அதனை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இளம் நடிகர்களான உன்னி முகுந்தன், நீரஜ் மாதவ, ரமேஷ் பிஷரோடி மற்றும் நாயகி சம்யுக்த மேனன் உள்ளிட்ட பலருக்கும் இது போன்று ஒரு சேலஞ்ச் விடுத்துள்ளார். இதுபோன்ற சவாலை நிறைவேற்றுவதற்காகவே பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை அளிக்க முன் வருவார்கள்.. இதுவரை எத்தனயோ சேலஞ்ச்'களை பார்த்திருக்கிறோம்.. முதன்முறையாக இப்படி ஒரு நல்ல விஷயத்திற்காக இந்த 'சேலஞ்ச்' பயன்படுத்தப்படுவது ஆச்சரியமான ஒன்று.

மூலக்கதை