போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு

ஃபரிதாபாத்,: ஃபரிதாபாத் புதிய தொழில்துறை டவுன் துணை போலீஸ் கமிஷனர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தினால் அரியானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலம், ஃபரிதாபாத் புதிய தொழில்துறை டவுன் (என்ஐடி) துணை போலீஸ் கமிஷனர் விக்ரம்ஜித் சிங் கபூர், இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது சர்வீஸ் ரிவால்வர் துப்பாக்கி மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கபூர் தனது மனைவியுடன் இங்குள்ள பிரிவு - 30ல் உள்ள போலீஸ் காலனியில் வசித்து வந்தார்.

அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறவிருந்தார். தகவலறிந்த அரியானா போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீஸ் டிசி தன்னைத் தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை