காஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்

ஜம்மு: காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் தேசிய விருது பெற்ற சிறுவனுக்கு தகவல் சொல்ல முடியாமல் படக் குழு திணறி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததுடன் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதுடன் தகவல் ெதாடர்பு, இணைய தள சேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கையை சமீபத்தில் ரஜினிகாந்த் பாராட்டினார்.

அதேசமயம் நடிகர் விஜய் சேதுபதி எதிர்கருத்து ெதரிவித்தார். இது சர்ச்சையாகி உள்ளது.இதற்கிடையில், 2018-ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த உருது மொழி படத்துக்கான விருதுக்கு ‘ஹமீத்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘ஹமீத்’ படத்தில் நடித்துள்ள காஷ்மீரைச் சேர்ந்த தல்ஹா அர்ஹத் ரேஷி என்ற சிறுவன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். விருதுகள் அறிவிக்கப்பட்டு 2 நாட்கள் கடந்தும் சிறுவனுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதுபற்றி தகவல் தெரிவிக்க முடியாமல் படக் குழுவினர் தவித்து வருகின்றனர்.

தொலைத்தொடர்பு, இணைய தள சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

இதுபற்றி கூறிய பட இயக்குநர் இஜாஸ் கான், ‘தேசிய விருதுக்கு தேர்வானது குறித்து சிறுவனுக்கு தகவல் அளிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை