370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

தினகரன்  தினகரன்
370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: நாடு முழுவதும் நாளை 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளோம். இந்நிலையில், நாட்டுக்கு மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார்.  சுதந்திர தினம் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்றும் நாட்டின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம் என்று தெரிவித்தார்.  நாடு இன்று சந்திக்கும் சவால்களை மகாத்மா காந்தி அன்றே தெரிந்து வைத்திருந்தார். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். 370வது சட்டப்பிரிவு  நீக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சக குடிமக்களுக்கு கிடைத்த அதே உரிமைகள், அதே சலுகைகள் மற்றும் அதே வசதிகள் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் என்றார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச்  சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதாகும் என்றார். இந்த கோடையின் தொடக்கத்தில், இந்திய மக்கள் 17 வது பொதுத் தேர்தலில் பங்கேற்றனர். இது மனித வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக பயிற்சியாகும். இதற்காக நான் வாக்காளர்களை வாழ்த்த வேண்டும். அவர்கள் வாக்குச் சாவடிகளில்  அதிக எண்ணிக்கையில் & மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர் என்றார்.

மூலக்கதை