செப்.,ல் புதுப்படம் - வடிவேலு ரெடி

தினமலர்  தினமலர்
செப்.,ல் புதுப்படம்  வடிவேலு ரெடி

சிம்புத்தேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் ஆரம்பமான படம் ‛இம்சை அரசன் 24ம் புலிகேசி'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் வடிவேலு, சிம்புத்தேவன் இடையே பிரச்னை உருவாகி படம் நின்று போனது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னை நடந்தது. சமீபத்தில் இந்த பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. ‛24ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு வெளியேறி உள்ளார். அடுத்து புதுப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார்.

வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், மன அமைதிக்காக, சில நாட்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். சினிமா, என்னை ஒருபோதும் ஒதுக்காது. வலுவான கூட்டணியில், அட்டகாசமான கதையில் செப்டம்பர் மாதம் முதல் புதிய படத்தில் நடிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை