அபிராமியை அடிக்கப் பாய்ந்த முகென்

தினமலர்  தினமலர்
அபிராமியை அடிக்கப் பாய்ந்த முகென்

சென்னை: முகென் - அபிராமி விவகாரத்தால் பிக் பாஸ் வீடு நேற்று கலவர பூமியாக காட்சியளித்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ள வனிதா ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வெளியில் பேசப்படும் விஷயங்களை எல்லாம் போட்டியாளர்களிடம் தெரிவித்து, அவர்களைக் குழப்பும் வேலையில் வனிதா ஈடுபட்டுள்ளார்.

வனிதா முதலில் டார்கெட் செய்தது அபிராமியை தான். ஏனென்றால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது, யாராவது ஏதாவது சொன்னால் உடனே அதை நம்பி அப்படியே செயல்படுவது என பிக் பாஸ் வீட்டில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது அவர் ஒருவர் மட்டுமே. இதனால் அவரிடம் போய் முகென் பற்றி எக்குத்தப்பாக போட்டுக்கொடுத்தார் வனிதா.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட கஸ்தூரி, நீயா நானா கோபிநாத் ரேஞ்சுக்கு, முகென் - அபி உறவை பற்றி ஹவுஸ்மேட்சை அமரவைத்து விவாதம் நடத்த தொடங்கிவிட்டார். அனைவரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்து அபிபையும், முகெனையும் கோபப்படுத்தினர்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த முகென், சேரை தூக்கி அபியை அடிக்கப் பாய்ந்தார். இதனால் பிக்பாஸ் வீடு கலவர பூமியாக காட்சி அளித்தது. சேரன், சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் முகெனை சமாதானம் செய்தனர். மற்றொருபுறம் அபிராமி மீண்டும் மூலையில் உட்கார்ந்து அழத் தொடங்கிவிட்டார். அவரை ஷெரீனும், லாஸ்லியாவும் சமாதானம் செய்தனர்.

இறுதியில் அபியும், முகெனும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு பிரிந்துவிட்டனர்.

மூலக்கதை