கமல் 60: வாழ்த்து சொன்ன ஸ்ருதிஹாசன்

தினமலர்  தினமலர்
கமல் 60: வாழ்த்து சொன்ன ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசன் நடிக்க வந்து 60 ஆண்டுகளாகி விட்டதை அடுத்து அவருக்கு பல்வேறு இந்திய திரையுலக பிரபலங்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்தி உள்ளார்.

60 ஆண்டுகளாக கலைச்சேவை செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்துதான் பலரும் நடிப்பு கற்றுக் கொண்டார்கள். நீங்கள் அவர்களுக்கெல்லாம் தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தமான மகாநதி படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளேன். அழகான, தைரியமான, ஒரு எமோசனலான வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். கலைத்துறைக்கு 60 ஆண்டுகளாக உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை