சினிமாவில் பிசியாகும் மீரா மிதுன்

தினமலர்  தினமலர்
சினிமாவில் பிசியாகும் மீரா மிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் ஆரம்பத்தில் இருந்தே சசர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். அதிலும் சேரன் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்தியதால் பார்வையாளர்களால் வெறுக்கப்பட்ட மீரா மிதுன், பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது சினிமாவில் அடுத்தடுத்து புதிய படவாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்தவகையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‛நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மீராமிதுன்.

அடுத்தப்படியாக விஜய் ஆண்டனி - அருண்விஜய் நடித்து வரும் அக்னிச்சிறகுகள் படத்திலும் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மூடர் கூடம் நவீன் இயக்கும் இந்த படத்தில் ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கிறார்.

மூலக்கதை