விரைவில் ஆதித்ய வர்மா முதல் சிங்கிள் டிராக்

தினமலர்  தினமலர்
விரைவில் ஆதித்ய வர்மா முதல் சிங்கிள் டிராக்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின், தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ள படம் ஆதித்ய வர்மா. துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்க, பிரியா ஆனந்த் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார்.

கிரிசய்யா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஜூன் மாதமே வெளியான நிலையில், ரதன் இசையில் விவேக் எழுதியுள்ள ‛எதற்கடி....' என்ற பாடலின் முதல் சிங்கிள் டிராக் டீசர் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் முழு வெர்சன் விரைவில் வெளியாகிறது.

மூலக்கதை