ஆணின் துணிச்சல் மிக்கவர் வரலட்சுமி: விமல்

தினமலர்  தினமலர்
ஆணின் துணிச்சல் மிக்கவர் வரலட்சுமி: விமல்

விமல், வரலட்சுமி நடித்துள்ள படம் கன்னி ராசி. முத்துக்குமரன் இயக்கி உள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு படக் குழுவை வெகுவாக பாராட்டிய நடிகர் விமல், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் காளி வெங்கட் ஆகியோருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

'நடிகை வரலட்சுமி பற்றி சிலாகித்து பேசிய விமல், நான் ஏற்கனவே பல நாயகிகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்; ஆனால், முதல் முறையாக கன்னி ராசியில் ஒரு நாயகனுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்தளவுக்கு துணிச்சலாக செயல்படக் கூடியவர் வரலட்சுமி' என நடிகர் விமல் கூறியிருக்கிறார்.

மூலக்கதை