ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் விமானத்தில் பயணித்த போது நேட்டோ படை விமானம் இடைமறித்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் விமானத்தில் பயணித்த போது நேட்டோ படை விமானம் இடைமறித்ததால் பரபரப்பு

ரஷியா: ரஷியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார். லிதுவேனியா நாட்டின் வான் பகுதியை ரஷிய பாதுகாப்பு மந்திரி பயணித்த விமானம் கடந்தபோது, நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்தது. மேலும், அந்த விமானத்தை தாக்குவது போன்று அச்சுறுத்தும் விதமாக மிகவும் அருகில் வந்தது.அப்போது, நேட்டோ விமானத்தின் பின்புறமாக திடீரென ரஷிய நாட்டின் அதிநவீன சு-27 ரக போர் விமானம் வேகமாக வந்தது. ரஷிய போர் விமானத்தை கண்டதும் நேட்டோ படையின் எப்-18 விமானி பதறியடித்து தனது விமானத்தை வேறு திசையில் திருப்பி பின்வாங்கினார். இதையடுத்து, மந்திரி சென்ற விமானத்துக்கு ரஷிய போர் விமானம் பாதுகாப்பு அளித்தபடி சென்றது. நேட்டோ போர் விமானமும், ரஷிய போர் விமானமும் நடுவானில் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

மூலக்கதை