சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி போலீஸ்காரருக்கு சிறை: சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி போலீஸ்காரருக்கு சிறை: சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் பிரசாந்த் (வயது 25) போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து போலீஸ் நிலையத்தில் அருண் பிரசாந்த் மீது புகார் கொடுத்துள்ளனர். பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து போலீசார் விசாரானை மேற்கொண்டனர். அப்போது அவருடைய செல்போனை சோதனை செய்தபோது 700-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் அருண்பிரசாந்த்தை சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வேலையும் பறிக்கப்பட்டு விட்டது.இதுதொடர்பான வழக்கு நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருந்த நீதிபதி வழக்கை விசாரித்து அருண் பிரசாந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகலாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை