2022ல் காமன்வெல்த் போட்டி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி.....ஒலிம்பிக் போட்டியிலும் இணைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
2022ல் காமன்வெல்த் போட்டி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி.....ஒலிம்பிக் போட்டியிலும் இணைப்பு

லண்டன்: கிரிக்கெட் போட்டியானது தற்போது உலகில் கால்பந்துக்கு அடுத்து அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் போட்டியாக வளர்ந்துள்ளது. ஆரம்ப காலங்களில் சில நாடுகளுடன் துவங்கிய இந்த போட்டி தற்போது 10 அணிகளுக்கும் மேலாக அணிகளை கொண்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை தொடர் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த போட்டிகளை ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதற்கு பச்சை கோடி காட்டும் வண்ணம் தற்போது இரண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஒன்று ஒலிம்பிக் தொடரின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் கிரிக்கெட்டும் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளுக்கும் தனித்தனி போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு அறிவிப்பு என்னவென்றால், காமன் வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இணைகிறது. இந்த போட்டியானது 2022 ஆம் ஆண்டு பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் இணைகிறது.

இதில் தற்போதைக்கு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது.

.

மூலக்கதை