அரசியல் சாராத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக செயல்படுவது ஏன்?: தலைமை நிதிபதி ரஞ்சன் கோகாய்

தினகரன்  தினகரன்
அரசியல் சாராத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக செயல்படுவது ஏன்?: தலைமை நிதிபதி ரஞ்சன் கோகாய்

டெல்லி: அரசியல் தொடர்பு இல்லாத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக செயல்படுவது எப்படி என்பது குறித்தும் என் என்பது பற்றியும்  தனக்கு  தானே கேள்வி எழுப்பிக்கொள்வதாக உச்சநிதிமன்ற தலைமை நிதிபதி ரஞ்சன் கோகாய்  தெரிவித்துள்ளார். சிபிஐ அமைப்பின் நிறுவனரும் அதன் முதல் இயக்குநருமான  D.P. கோலி நினைவாக டெல்லியில் 18-ஆம் ஆண்டாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய  தலைமை நிதிபதி \' அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான வழக்குகளில் சில சமயங்களில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதும் நீதித்துறையின் தரத்தை சிபிஐ.யால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது எதார்த்தமான உண்மை என்கிறார். மத்திய கணக்கு தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜி. போன்று முழுக்க முழுக்க சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ மாற்றப்பட வேண்டும் என்றும் இதற்கு ஏற்ற வகையில் முதல்ல மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்து சிபிஐ விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறுவன அமைப்பு, செயல்பாடு, அதிகார வரம்பு, கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு விரிவான சட்டத்தை கொண்டு சிபிஐ அமைப்பை மேலும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்றும் அறிவுறித்தினார். எந்தவொரு பொதுநிறுவனத்தின் வெற்றியை காட்டிலும் தோல்விதான் மக்களின் கவனத்தின் ஈர்க்கும். அரசியல் சார்ந்த வழக்குகளில், சிபிஐ.யின் செயல்பாடு சரியான வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் அரசியல் இல்லாத வழக்குகளில் சிபிஐ நன்றாக வேலை செய்வது ஏன் என்று தனக்கு தானே கேள்வி எழுப்பிக்கொண்டதாக தலைமை நிதிபதி ரஞ்சன் கோகாய்  தெரிவித்துள்ளார்.

மூலக்கதை