கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க ஆட்சியர் பரிந்துரை !!

தினகரன்  தினகரன்
கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க ஆட்சியர் பரிந்துரை !!

நெல்லை : நெல்லை அருகே கடையத்தில் கொள்ளையர்களை விரட்டியடித்த மூத்த தம்பதிக்கு விருது வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின  விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு தமிழக அரசின் வீர தீர விருதை முதலமைச்சர் விருது வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு இரவில் தனியாக இருந்த முதியவர்களை தாக்கி கொள்ளையடிக்க மர்மநபர்கள் முயன்றனர். கொள்ளையர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடி நெல்லை தம்பதியினர் விரட்டியடித்தனர்.

மூலக்கதை