தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது

சென்னை: கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.29 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. ஆனால், இன்று(ஆக.,14) சவரன் ரூ.408 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,576க்கும், சவரன் ரூ.28,608க்கும், 24காரட் 10கிராம் தங்கம் விலை ரூ.37,330க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் சரிந்து ரூ.47.40ஆக விற்பனையாகிறது.

மூலக்கதை